India
தொடர் மேல்முறையீடு.. கடைசியாக கணவரின் சம்பளத்தை RTI மூலம் அறிந்துகொண்ட மனைவி.. உ.பி பெண்ணால் பரபரப்பு !
உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த சஞ்சு குப்தா என்ற பெண் ஒருவர், 2018-19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில் தனது கணவரின் வருமானத்தை தெரிந்துகொள்ள நினைத்துள்ளார். அதனால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருக்கிறார்.
பரேலியில் உள்ள மத்திய பொது தகவல் மையத்தின் வருமான வரித்துறை அதிகாரியோ, சஞ்சு குப்தா கேட்ட தகவலை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவலை அவரது கணவர் விருப்பம் இன்று கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த பெண், தனது கணவன் வருமானத்தை எப்படியாவது அறிந்துகொள்ள வேண்டும் என்று, FAA எனும் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்துள்ளார். ஆனால் மேல்முறையீட்டு ஆணையமோ, மத்திய பொது தகவல் அலுவரின் உத்தரவு செல்லும் என கூறியுள்ளது.
இருப்பினும் தனது விடாமுயற்சியை கைவிடாத அந்த பெண், மீண்டும் மத்திய தகவல் மையத்தில் (Central Information Commission) மேல்முறையீடு செய்துள்ளார்.
அங்கு நீதிமன்றங்களின் ஆணைகளை வைத்து வாதம் செய்த பிறகே, அந்த பெண் சஞ்சு குப்தா தனது கணவரின் வருமான விவரங்களை தெரிந்துகொள்ள உரிமை உள்ளது என்றும், அவருக்கு வருமான வரித்துறையும் மத்திய பொது தகவல் அலுவலரும் வேண்டிய தகவல்களை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தொடர்ந்து தனது முயற்சியால் கடுமையாக போராடி, தன்னுடைய கணவரின் ஆண்டு வருமானத்தை தெரிந்துகொள்ள முயன்ற உ.பி பெண்ணின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!