India
கண்ணை மறைத்த காதல்.. மனைவி மகள்களுக்கு தீ வைத்த கொடூர கணவர்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி !
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே பகுதியில் பிரசாத் -பிரீத்தி சாந்தாராம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இத்தம்பதிக்கு 14 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதில் பிரசாத்துக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதால் மனைவி மகள் இறந்தால் காதலியுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என பிரசாத் நினைத்துள்ளார். மேலும், அவர்களை கொலை செய்யவும் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி, மற்றும் மகள்கள் மீது தீ வைத்துள்ளார். இதில் பிரசாத்துக்கும் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும், அங்கிருப்பவர்கள் வந்து தீ பிடித்தவர்கள் மீது தீயை அணைத்து அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் மனுவை பிரீத்தி உயிரிழந்த நிலையில், மகள்கள் இருவருக்கும் தொண்ணுறு சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் தீவைத்து எரித்த கணவரை கைது செய்துள்ளனர்
Also Read
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!