India

“6 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : யோகி அரசின் அலட்சியத்தால் மரண தண்டனை ரத்து” - உச்சநீதிமன்றம் காட்டம்!

உத்தரப்பிரதேசத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு 09.03.2012ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கின் விவரங்களை விசாரித்து வந்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணையை நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியம் அடங்கிய அடங்கிய அமர்வு நடந்தி வந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை உத்தரப்பிரதேச காவல்துறை முறையாக நடத்தவில்லை என்றும் அரசு தரப்பு அளித்த சாட்சியங்கள் பல முரண்பாடாக இருப்பதாகவும், அதனை நீதிமன்றம் கவணிக்கத் தவறியுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

அதுமட்டுமல்லாது, சிறுமியின் உடலை காவல்நிலையம் கொண்டுச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சாட்சிகளின் குறுக்குவிசாரணையின் போது அவை மறுக்கப்பட்டதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்திற்கு தாமதமாகத்தான் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த குழந்தையின் ஆடையில் இருந்த ரத்தம் குறித்து தடயவியல் அறிக்கை சரியான முறையில் இல்லை. எனவே வழக்கை சரிவர நடத்தவில்லை என்பதாலும், போதிய ஆதாரங்கள் இல்லாத்தாலும் மரண தண்டனையை இந்த அமர்வு ரத்து செய்கிறது.

மேலும் குற்றச்சாட்டப்பட்ட நபருக்கு அநீதியை அரசு இழைத்துள்ளது. குற்றவாளியின் எந்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. அரசாலும் நீதிமன்றத்தாலும் அநீதி இழைக்கப்பட்ட ஒருவருக்கு தண்டனை வழங்கமுடியாது எனக் கூறி, தூக்குத் தண்டனையை ரத்து செய்து விடுதலை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குற்றத்திற்கான உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கித் தருவதிலும் அரசு தோல்வியை அடைந்துள்ளது என உச்சநீதிமன்றத்தின் கருத்து மூலம் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. 6 ஆண்டுகளுக்கு பின்னர் தண்டனை பெற்ற ஆட்டோ டிரைவர் !