India
15 நிமிடத்தில் பறந்து செல்லலாம்.. பெங்களூருவில் அறிமுகமாகும் ஹெலிகாப்டர் சேவை: கட்டணம் எவ்வளவு தெரியுமா?
பெங்களூருவில் எப்போதுமே கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதனால் வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வார்கள்.மேலும், அடிக்கடி மழை பெய்து கொண்டே இருப்பதால், கூடுதல் போக்குவரத்து நெரில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இது பொதுமக்களுக்குத் தினந்தோறும் தீராத பிரச்சனையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், ola, uber போன்ற கார் சேவைகளைப்போன்று பிளேட் இந்தியா என்ற நிறுவனம் ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனம் முதற்கட்டமாகப் பெங்களூரு விசமான நிலையத்திலிருந்து HAL பகுதி வரை ஹெலிகாப்டர் சேவை இயக்க உள்ளது.
பொதுவாக வாகனத்தில் சென்றால் கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகும். ஆனால் ஹெலிகாப்டரி சென்றால் 15 நிமிடங்களிலேயே அங்கு சென்று விடலாம். மேலும் 5 முதல் 6 பேர் வரை மட்டுமே பயணம் செய்ய முடியும். ஒரு டிக்கெட் விலை ரூ.3500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தினமும் இரு மார்க்கத்திலும் ஒரு முறை மட்டுமே சேவை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது காலை 9 மணி, மாலை 4 மணி மட்டுமே தற்போதைக்கு பயண சேவை நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவும் இணையத்தில் தொடங்கியுள்ளது.
பிளேட் இந்தியா என்ற நிறுவனம் இதுபோன்று மகாராஷ்டிராவில் இருந்து மும்பைக்கும், பூனேவில் இருந்து ஷீரடி இடையே சேவையை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!