India
வகுப்பறையில் பூட்டி கடுமையாக தாக்கப்பட்ட பள்ளி சிறுவர்கள்.. DANCE ஆடவில்லை என்பதால் ஆசிரியர் வெறிச்செயல்!
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் ஆசிரியராக விகாஸ் சிரில் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளியில் ஒரு விழா கொண்டாடுவதற்காக 6-ம் வகுப்பு மாணவர்களை நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்க அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.
மேலும் அவர்களுக்கு நடன பயிற்சியும் கொடுத்து வந்துள்ளார். ஆனால் மாணவர்கள் சிலர், அவர் சொல்லிக்கொடுத்து போல் ஆடாமல் இருந்துள்ளனர். இதனால் கோபமடைந்த ஆசிரியர்கள் அவர்களை கடுமையாக வசைபாடியதோடு, தாக்கியும் உள்ளார். இதனால் பொறுமை இழந்த மாணவர்கள், இதுகுறித்து தங்கள் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர்.
ஆனால் அந்த தலைமை ஆசிரியரோ மாணவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், அந்த ஆசிரியரிடம் கூடுதலாக அடிக்க சொல்லியதாக கூறப்படுகிறது. அதன்பேரில், நடனம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரும் புகார் அளித்த மாணவர்கள் 13 பேரை ஒரு வகுப்பறையில் பூட்டி வைத்து, அங்கு ஓட ஓட பிரம்பை கொண்டு அடித்துள்ளார். இதில் அலறி துடித்த மாணவர்கள் கத்தும்போது மீண்டும் அடித்துள்ளார்.
பின்னர் அவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் இது குறித்து கூறினர். இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்ததோடு ஆத்திரம் கொண்ட பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் இது போன்று இப்பள்ளியில் அடிக்கடி நடப்பதாகவும், ஆனால் ஆசிரியர்களை யாரும் கண்டிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
தொடர்ந்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஒரு மிருகத்தை போன்று நடந்துகொள்வதாகவும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதனிடையே தாக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. மேலும் புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?