India
"BOYFRIENDS வாடகைக்கு விடப்படுவர்" - பெங்களூரை கலக்கும் புதிய செயலி.. பின்னணி என்ன ?
இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகராக அறியப்படும் பெங்களுருவில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் லட்சக்கணக்கானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஆனால் அதே நேரம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை கதிகலங்க வைக்கும் வேலையில்லா திண்டாட்டம் ஐடி நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை.
ஏராளமான நிறுவனங்கள் ஆட்குறைப்பு வேலைகளை செய்து வருகின்றன. அதுமட்டுமின்றி தனியார்மயத்தை கொடூரமான வேலைப்பளுவும் பணியாளர்களை அதிகம் பாதித்து வருகிறது. இதன் காரணமாக மனஅழுத்தங்களை எதிர்கொள்ளும் பணியாளர்கள் அதிகம் இருக்கும் இடமாகவும் பெங்களூரு இருந்து வருகிறது.
இதன்காரணமாக பலர் அங்கு விரும்பியவர்களுடனான உறவை முடிவுக்கு கொண்டு வருவதாகவும், இதனால் பலர் அங்கு தனிமையில் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படிப்பட்ட பெண்களை குறிவைத்து செயலி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
பெங்களுருவில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் சேர்ந்து டாய்பாய்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். அதில் தனிமையில் இருக்கும் பெண்கள் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சேவை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், தோழமைக்காகத் தேடுபவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டதாக அதை உருவாக்கியவர்கள் கூறியுள்ளனர்.
நீங்கள் ஒரு மணிநேர கட்டண சேவையில் ஒரு காதலனை வாடகைக்கு எடுக்கலாம் என்றும், மாடல்கள், பிரபலங்கள் மற்றும் சாதாரண மக்கள் வரை யாரை வேண்டுமானாலும் வாடகைக்கு எடுக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த செயலையை டாய்பாயின் அதிகாரப்பூர்வ Instagram- பக்கத்தை தொடர்ப்பு கொண்டு APK File-ஐ பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த செயலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!