India
கணவன் குறித்து 8 ஆண்டுகளுக்கு பிறகு மனைவிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியடைந்து புகார் அளித்த மனைவி !
குஜராத் மாநிலம் வதோதரா என்ற பகுதியில் 40 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவரது முதல் கணவர் 2011-ம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து மகளுடன் தனியே வாழ்ந்து வந்த இவர், இரண்டாவது திருமணம் செய்வதற்காக திருமண மையத்தில் பதிவு செய்தார்.
அதில் விராஜ் வர்தன் என்பவர் அறிமுகமாகி, அவரை 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து இருவரும் தேனிலவுக்கு சென்றபோதும் கூட அவர் இந்த பெண்ணுடன் உறவுகொள்ளவில்லை. ஏதோ ஒரு காரணம் கூறி தட்டி கழித்து வந்துள்ளார். இப்படியே பல நாட்களாக இருவருக்குள்ளும் தாம்பத்திய உறவு இல்லாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கோபமடைந்த அந்த பெண் தனது கணவர் விராஜ் வர்தனிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது ரஷ்யாவில் இருந்தபோது ஏற்பட்ட ஒரு விபத்தில் தனக்கு உடலுறவு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்க்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து 2020-ம் ஆண்டில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கொல்கத்தா சென்றுள்ளார். அங்கே அறுவை சிகிச்சை செய்து விட்டு திரும்பியுள்ளார். பின்னர் தனது கணவர் முழுவதுமாக குணமாகிவிட்டார் என்று நினைத்த மனைவிக்கு அடுத்து தான் பெரிய அதிர்ச்சியே காத்துக்கொண்டிருந்தது.
அதாவது அந்த பெண் திருமணம் செய்தது ஒரு ஆண் இல்லை என்றும், அவர் ஒரு பெண் என்றும் தெரியவந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக கொல்கத்தாவிற்கு சென்று செய்து கொண்ட அறுவை சிகிச்சையானது, ஆண் உறுப்புகளை பொருத்துவதற்கான பாலின மாற்று அறுவை என்று மனைவிக்கு தெரியவந்தது.
இதையடுத்து மனைவி பெரும் அதிர்ச்சியில் இருந்துள்ளார். அதோடு அவரை உடலுறவுக்கு கட்டிப்படுத்தி உறவு கொகொண்டுள்ளார் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் மோசமான விளைவை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டி வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பாதிக்கப்பட்ட பெண், தன்னை திருமணம் செய்தவரை குறித்து காவல்நிலையத்தில் மோசடி புகார் கொடுத்தார்.
இதையடுத்து தன்னை ஆண் என்று ஏமாற்றி வந்த பெண் மேல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பெண்ணே தன்னை ஆண் என்று கூறி திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!