India

அரசு வேலை கொடுப்பதாக மோசடி.. 7000 பேரிடம் ரூ.300 கோடி பறிப்பு.. ஆந்திராவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் !

ஆந்திர மாநிலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரவிக்குமார் என்பவரிடம் ஒரு கும்பல் பணம் பறித்துள்ளது. நாளடைவில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரவிக்குமார் இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி காவல்நிலையத்தில் புகர் அளித்தார்.

இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது இதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கு வேகம் எடுத்துள்ளது.

இந்த வழக்கில் சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதும், சுமார் 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும், மோசடி கும்பலை சேர்ந்தவர்களையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.

பின்னர் அவ்ர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் ஹரி பாபு, கஞ்சவரபு சிவா ஆகியோருடன் இணைந்து வேலையில்லா இளைஞர்களைக் குறிவைத்து ஒன்றிய, மாநில அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

மேலும், பலருக்கு போலி பணி நியமன ஆணைகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கி, சில மாதங்கள் சம்பளம்கூட வழங்கப்பட்டு தகவலும் தெரியவந்தது. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Also Read: "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமானிய மக்களிடமிருந்து மிகவும் விலகி நிற்கிறார்" -ப.சிதம்பரம் விமர்சனம்!