India

ராஜஸ்தான்: ரகசியத்தை மறைத்து திருமணம்.. முதல் நாளே மருமகளுக்கு அடி,உதை, 10 லட்சம் அபராதம் -மறைத்தது என்ன?

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பில்வாரா என்ற கிராமத்தில் சன்சி என்ற நாடோடி சமூகத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணமானது. இந்த சன்சி சமூகத்தில் 'குக்காடி பிரதா' என்ற பாரம்பரிய வழக்கப்படி திருமணம் முடிந்த பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யப்படுகிறது.

அந்த வகையில், அந்த பெண்ணுக்கும் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் ஏற்கனவே கன்னி கழிந்து விட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆத்திரமடைந்த மணமகனின் குடும்பத்தினர், திருமணம் நடந்த அன்றே அந்த பெண்ணை அடித்து உதைத்து துப்புறுதியுள்ளனர்.

இதில் வலி தாங்க முடியாது அந்த பெண், தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளதாக கண்ணீருடன் கதறி அழுது தெரிவித்தார். மேலும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக கூறினார். இதையடுத்து காவல் நிலையம் சென்று விசாரித்த மணமகனின் வீட்டாரிடம், புகார் கொடுத்தது உண்மை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் உண்மையை மறைத்ததினால் கோபத்தில் இருந்த மணமகனின் குடும்பத்தினர் உள்ளூர் பஞ்சாயத்தை கூட்டினர். அவர்கள் வந்து விசாரித்த பின், பெண்ணுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.

இதைத்தொடர்ந்து புதுமண பெண் அடித்து, உதைக்கப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் கணவர் வீட்டார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முன்னேறி போய் கொண்டிருக்கும் சமயத்தில், இன்னமும் பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தும் இது போன்ற பகுத்தறிவற்ற கிராமங்கள் இந்தியாவில் இருக்க தான் செய்கிறது. கன்னித்தன்மை சோதனையில் தோல்வியடைந்த பெண்ணுக்கு 10 லட்சம் அபராதம் விதித்த பஞ்சாயத்தின் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 1 வயது குழந்தையை கவ்விய புலி.. கடுமையாக போராடி காப்பாற்றிய இளம் சிங்கப்பெண்.. ம.பி-யில் பதைபதை சம்பவம் !