India
சைரஸ் மிஸ்திரி மரணம் : பேய் வேகத்தில் மோதிய பென்ஸ் கார்.. பலி வாங்கிய சீட் பெல்ட் - அதிர்ச்சி உண்மைகள்!
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி. இவர் நேற்று குஜராத்தில் உள்ள உத்வாதா கோயிலுக்கு சென்று விட்டு காரில் திருப்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவருடன் காரில் பயணம் செய்த நண்பர்கள் ஜஹாங்கீரி, டாரியஸ் அவரது மனை டாக்டர் அனகிதா ஆகியோரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், சைரஸ் மிஸ்த்ரி சென்ற கார் சாலையில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் இந்த விபத்திற்கு அதிவேகமாகக் காரை ஓட்டிவந்ததே காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.
அதேபோல் காரில் பயணம் செய்தபோது சைரஸ் மிஸ்த்ரி சீட் பெல்ட் அணியாமல் இருந்துள்ளார். இதனால் கார் தடுப்பில் வேகமாக மோதும் போது அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் காரை டாரியஸ் மனைவி அனகிதா ஓட்டிவந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தை அப்பகுதியில் இருந்த நிதிஷ் என்பவர் நேரில் பார்த்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கார் அதிவேகமாக வந்தது. முன்னாள் சென்ற காரை முந்தும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்த தடுப்பில் மோதியது என தெரிவித்துள்ளார்.
மேலும் சோதனைச் சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூர்யா அற்றின் பாலத்தை 9 நிமிடங்களில் கார் வேகமாகக் கடந்துள்ளதும் சி.சி.டி.வி காட்சியில் பதிவாகியுள்ளது என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”விடுபட்டவர்களுக்கும் ரூ.1,000 கிடைக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
-
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, ‘உலக புத்தொழில் மாநாடு 2025’! : எங்கு? எப்போது?
-
பஞ்சாப் மழை வெள்ளம்! : 3.87 லட்சம் பேர் பாதிப்பு - உயிரிழப்பு 51ஆக உயர்வு!
-
”பா.ஜ.கவின் பொருளாதாரச் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது” : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
தமிழ்நாட்டில் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை : போட்டி அட்டவணையை வெளியிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி!