India

"5 நிமிஷம் பாத்ரூம் போனது ஒரு குத்தமா..?" GST வரியுடன் ரூ.224 பில் நீட்டிய IRCTC.. கொந்தளித்த பயணிகள் !

இந்தியாவில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்து பொருட்களுக்கும் GST வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி டீ, காபி முதல் நாப்கின் வரை அதிக வரி விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்திய இரயில்வே துறை சேவைகளை பெறுவதற்கும் GST வரி விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக முன்பதிவு செய்வது முதல் டிக்கெட்டை ரத்து செய்வது வரை அனைத்திற்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆக்ரா கன்ட்டோன்மென்ட் இரயில் நிலையத்தில் உள்ள எக்சிகியூட்டிவ் லவுஞ்சில் (Executive Lounge) உள்ள ஓய்வறையை பயன்படுத்திய இரண்டு வெளிநாட்டு பயணிகளுக்கு பில்லாக ரூ.224 வசூல் செய்யப்பட்டுள்ளது.

அதாவது டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் இருந்து ஆக்ராவிற்கு இரண்டு பேர் இரயிலில் வந்துள்ளனர். அவர்கள் இறங்க வேண்டிய இரயில் நிலையத்தில் இறங்கியவுடன் Executive Lounge-ஐ என்ற ஓய்வறையை பயன்படுத்தியுள்ளனர்.

அதாவது டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் இருந்து ஆக்ராவிற்கு இரண்டு பேர் இரயிலில் வந்துள்ளனர். அவர்கள் இறங்க வேண்டிய இரயில் நிலையத்தில் இறங்கியவுடன் Executive Lounge-ஐ என்ற ஓய்வறையை பயன்படுத்தியுள்ளனர்.

அவர்கள் அங்கே கழிவறையை மட்டும் பயன்படுத்தியுள்ளனர். பிறகு 5 நிமிடம் கழித்து வெளியே வந்த அவர்களிடம் ஆளுக்கு ரூ.112 என்ற கணக்கில் ரூ.224-க்கான பில்லை நீட்டியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், வெறும் கழிவறையை பயன்படுத்தியதற்கு இவ்வளவு கட்டணமா என்று அதிர்ந்துள்ளனர். அதோடு இது மிகவும் அநியாயம் என்று கூறி இந்த தொகையை கட்ட முடியாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த சக ஊழியர்கள், இது குறித்து அவர்களிடம் விளக்கியுள்ளனர். அதாவது அவர்கள் பயன்படுத்திய கணக்கில் 12% GST வரியுடன் இவ்வளவு தொகை என்று கூறினர். இதையடுத்து வேறு வழியில்லாத பிரிட்டிஷ் பயணிகள் அந்த கட்டணத்தை செலுத்திவிட்டு சென்றனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து IRCTC செய்தி தொடர்பாளர் பிரஜேஷ் குமார் விளக்கமளித்துள்ளார். அதில், "Executive Lounge பயன்படுத்த தனியாக ஒரு நபருக்கு ரூ.100 நுழைவுக் கட்டணம் உண்டு.

அவர்களுக்கு 2 மணி நேரத்திற்கு ஓய்வறையில் தங்கும் போது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டினருக்கு இலவசமாக Wi-Fi, டீ, காஃபீ, டிவி உள்ளிட்ட வசதிகள் உள்ளது. ஆனால் கழிவறைக்கு மட்டும் தனியே கட்டணம் வசூலிப்பது இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

Also Read: ஜார்கண்ட் : பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பழங்குடியின சிறுமி.. தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த அவலம் !