India
இந்திய தேசியக் கொடியில் Made in China வாசகம்.. அதிர்ச்சியடைந்த சபாநாயகர்கள்: மவுனம் காக்கும் ஒன்றிய அரசு!
கனடாவில் சபாநாயகர்களுக்கான 65வது காமன்வெல்த் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் மாநிலங்களின் சபாநாயகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது, ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் கையில் தேசிய் கொடியை ஏந்தி பேரணியாக சென்றனர். அவர்கள் எடுத்துச் சென்ற இந்திய தேசியக் கொடியில் 'Made in China' என்ற வாசகம் இருந்ததைப் பார்த்து சபாநாயகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் , தேசியக் கொடியில் 'Made in China' என்ற வாசகம் இருந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இணையவாசிகள் பலரும் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக தேசியக் கொடியைக் கூட இறக்குமதி செய்வதா? மேக் இன் இந்தியா திட்டம் என்ன ஆனது என பலர் கேள்வி எழுப்பி ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் தேசியக் கொடியில் 'Made in China' என்ற வாசகம் எப்படி இடம் பெற்றது என்பது குறித்து இன்னும் ஒன்றிய அரசு பதில் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.
Also Read
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!