India
சாலையில் நடந்து சென்ற 2 பேரை இடித்துத் தூக்கி வீசிய கார்.. பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கூரன்முக்கு பகுதியில் சாலையோரம் இரண்டு வாலிபர்கள் பேசிக் கொண்டு நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்குப் பின்னால் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இருவர் மீது மோதியுள்ளது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு கார் சாலையோரம் இருந்த புதரில் கவிழ்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே கார் ஓட்டுநர் மற்றும் இளைஞர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் கார் மோதியதில் பலத்த காயம் அடைந்த இரண்டு இளைஞர்களையும் மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்கள் ஆபத்தா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!