India

கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. பயத்தில் தற்கொலை செய்த காதலன்.. நடந்தது என்ன ?

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள தோடபிட்டரகல்லு என்ற பகுதியை சேர்ந்தவர் அனுபல்லவி (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமானது. ஆனால் அனுபல்லவி நவீன்குமாருடன் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறப்படுகிறது. அதோடு இவர் ஹேமந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

தனது காதலுக்கு தனது கணவர் இடையூறாக இருப்பதாக எண்ணிய அனுபல்லவி, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு அனுபல்லவியின் தாயும் உதவி புரிந்துள்ளார். அதன்படி அவர்கள் நவீன் குமாரை கொலை செய்வதற்காக ரூ.90 ஆயிரம் முன்பணமாக கொடுத்து கூலிப்படையை ஏவியுள்ளனர். கொலை செய்த பிறகு மேலும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரும் வழங்குவதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கடந்த மாதம் (ஜூலை) 23-ம் தேதி நவீன் கூலிப்படைகளால் கடத்தப்பட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் கூலிப்படைகளோ கடத்திய நவீன்குமாரிடம் கறாராக இல்லாமல், நட்பு பாராட்டி குடித்து கும்மாளம் போட்டுள்ளனர். மேலும் மீதி பணம் வேண்டும் என்பதால், நவீன் மேல் கெச்சப் ஊற்றி, அதனை புகைப்படம் எடுத்து நவினை கொலை செய்து விட்டதாக அனுபல்லவிக்கு அனுப்பியுள்ளனர்.

அனுபல்லவியும் தனது கணவர் இறந்துவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் காதலன் ஹேமந்திடம் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்த அவர் எங்கே தனது மேல் பழி வந்துவிடுமோ என்று எண்ணி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனிடையே தனது சகோதரன் காணவில்லை என்று கடந்த ஆக்.2-ம் தேதி நவீனின் தங்கை காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, அவர்களும் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

பிறகு கடந்த ஆக்.6-ம் தேதி நவீன் தானாகவே வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தண்னை சில மர்ம நபர்கள் கடத்தியதாகவும், அவர்கள் என்னை மனம்மாறி விடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து யார் அவரை கடத்தியது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நவீனின் மனைவி மற்றும் மாமியார் சிக்கினார். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவர்களை சிறையிலடைத்தனர். இருப்பினும் மனம் கேட்காத நவீன், தனது மாமியாரை மட்டும் சிறையில் வைத்துக்கொள்ளுங்கள், எனது மனைவியை தான் அதிகம் நேசிப்பதால் அவரை மட்டும் விட்டு விடுங்கள் என்று காவல்நிலையத்தில் கெஞ்சியுள்ளார்.

இருப்பினும் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கணவரை கொல்ல தாயுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவிய மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காதலனை சந்திக்க சென்ற மகளை கொலைசெய்த பெற்றோர்.. தலை வேறு உடல் வேறாக வீசிய கொடூரம் - உ.பியில் அதிர்ச்சி !