India

"வங்கிகளை தனியார்மயமாக்கினால் இது தான் கதி.." - மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி !

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டின் சொத்துக்கள் என்று வர்ணிக்கப்பட்ட அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. இதற்கு தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் தனியார் முதலாளிகளிடமிருந்து நன்கொடை வாங்கி அவர்களுக்கு நாட்டின் வளங்களை மோடி அரசு விற்பனை செய்து வருகிறது.

அதன்தொடர்ச்சியாக நாட்டின் நன்மைக்காக பாடுபட்டு நாட்டின் குடிமக்கள் அனைவர்க்கும் வங்கி சேவையை கொண்டு சென்ற பொதுத்துறை வங்கிகளை ஒன்றிய அரசு தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. மேலும் வங்கிகளை தனியார்மயமாக்க சட்டம் ஒன்றையும் நிறைவேற்ற ஒன்றிய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதால் நல்லதை விட ஆபத்துகளே அதிகம் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், பொதுத்துறை வங்கிகள் லாபத்தை பெருக்குவதில் திறமையாக செயல்படுவார்கள். பொதுமக்களுக்கு நிதிச் சேவைகளை கொண்டுசெல்லும் இலக்கை எட்டுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

பொதுத்துறை வங்கிகள் லாபத்தை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படுவதில்லை என்பதற்கு நிறைய சான்றுகள் இருக்கிறது. அனைவருக்கும் நிதிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதில் அரசு படிப்படியான அணுகுமுறையை கையாள வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: "மக்களின் பெயர், போன் நம்பர் எல்லாம் ரூ.1000 கோடிக்கு விற்பனை"-மோடி அரசின் முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி!