India
ஆற்றில் கவிழ்ந்த ராணுவ பேருந்து.. 6 வீரர்கள் பலி: 30 பேர் படுகாயம்: விபத்திற்கு காரணம் என்ன?
இந்தோ - திபத்யன் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 39 துணை ராணுவ வீரர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி ராணுவ பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
இந்தப் பேருந்து, தெற்கு காஷ்மீர் பகுதியின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் என்ற இடத்தில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பேருந்து முழுவதும் நொறுங்கிய நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 39 பேர் பயணித்ததாக கூறப்படும் பேருந்தில் 37 பேர் இந்தோ திபத்யன் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் உள்ளூர் ஆட்கள் உதவியுடன் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணமாக கட்டுப்பாட்டை மீறி ஆற்றில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
-
இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?
-
"GST வரி விதிப்பு மாற்றத்தால் லாபம் அடையப்போவது பெரு நிறுவனங்கள்தான்" - கேரள அமைச்சர் விமர்சனம் !
-
”பொய் செய்தியற்ற சமூகத்தை அமைப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் : லண்டன் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!