India
தேசியக்கொடி ஏற்றும்போது திடீரென மயங்கி விழுந்த Ex ராணுவ வீரர் பரிதாப பலி - கர்நாடகாவில் நடந்த சோகம்!
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதுமட்டுமல்லாது, நாடுமுழுவதும் உள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலங்களில் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாடப்பட்டது. மேலும் பல்வேறு கிராமங்களில் அப்பகுதி மக்களே கூடி தேசியக்கொடியை ஏற்றிய சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில், சுதந்திர தின விழா கொடியேற்றத்தின் போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் கடபா தாலுகா குற்றபாடி பஞ்சாயத்தில் உள்ள பழைய ஸ்டேஷன் அமிர்த சரோவர் அருகே நடந்த கொடியேற்றத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது .
கொடியேற்றத்தை முன்னாள் தலைவர் என். கருணாகரா கொடி ஏற்றுவதற்கு தயாராகி கொண்டிருந்த போது, அங்கு நின்றிருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கங்காதர கவுடா கொடி வணக்கத்தை தெரிவித்தார். கொடியேற்றத்திற்கு தயாராகி கொண்டிருந்த போது, கங்காதர கவுடா, மயங்கி விழுந்தவுடன் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!