India
6 கோடி செலவு செய்து ஆடம்பர திருமணம்.. சிறுநீர் கழித்து கொடுமை செய்யும் கணவன்.. கண்ணீருடன் மனைவி புகார் !
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த ஆண்டு பெங்களூரை சேர்ந்த சந்தீப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணம் சுமார் 6 கோடி செலவில் நடைபெற்றது.
மேலும் இவரது கணவருக்கு 200 கிலோ வெள்ளி, 4 கிலோ தங்கம், 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் ஒன்றையும் வரதட்சணையாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே அந்த பெண்ணை அவரது கணவரும், மாமியாரும் சேர்ந்து கொடுமைபடுத்தி வந்துள்ளனர். மேலும் அந்த பெண்ணிடம் மீண்டும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, அவரது கணவர் குடித்துவிட்டு அந்த பெண்ணின் தலையில் சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த கொடுமைகளை தாங்க முடியாத அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கணவன் சந்தீப்பிடமும், அவரது குடும்பத்தாரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமாகி ஓராண்டிலே இளம்பெண் கணவன் குடும்பத்தார் மீது புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!