India
56 கோடி பணம்.. கணக்கில் வராத ரூ.390 கோடி சொத்துக்கள்: BJP தொடர்பு ? - IT ரெய்டில் ஆடிப்போன அதிகாரிகள் !
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள இரும்பு மற்றும் துணி வியாபாரி ஒருவரின் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.300 கோடிக்கு மேல் கணக்கில் வராத சொத்துக்கள் இருப்பது கண்டு வருமான வரித்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 8 வரை வருமான வரித்துறையினரின் இந்த சோதனை நடந்தது. இதில் 100 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளது. மேலும் 56 கோடி ரொக்கம், 32 கிலோ தங்கம், முத்து, வைரம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றையும் கண்டுபிடித்தனர்.
மேலும் கைபற்றப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு 13 மணி நேரம் ஆனதாகவும் கூறப்படுகிறது. ஜல்னா மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனத்திற்கு எதிராக வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் நடவடிக்கை உள்ளீடுகள் பெறப்பட்டதை அடுத்து, கடந்த வாரம் சோதனைகள் தொடங்கப்பட்டன என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இதுவரை கைப்பற்றப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.14 கோடி.
அதுமட்டுமல்லாது இந்த சோதனையின் போது சுமார் 250 அதிகாரிகள் 120 வாகனங்களில் அதிரடியாக சென்றனர். மேலும் ஒரே ரெய்டில் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். இந்த முதற்கட்ட விசாரணையில் இரண்டு தொழிலதிபர்களும் பா.ஜ.கவில் தொடர்பு இருப்பதாகவும், ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி அளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பா.ஜ.கவுடன் தொடர்பில் இருப்பதால் இதில் சிக்கிய தொழிலதிபர்கள் பற்றிய விவரங்களை வருமான வரித்துறையினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரான அங்கிதா முகர்ஜியின் இரு வீடுகளில் இருந்து 50 கோடி ரூபாய் அமலாக்க இயக்குனரகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இது வந்துள்ளது. மேற்கு வங்க எஸ்.எஸ்.சி ஊழல் தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!