India
கம்பத்தில் கட்டி முதியவரைக் கட்டையால் அடித்துக் கொன்ற குடும்பம்.. ஒடிசாவில் கொடூரம்!
ஒடிசா மாநிலம், கோராபும் மாவட்டத்திற்குட்பட்ட பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் குர்ஷா மணியக்கா. முதியவரான இவருக்கும் அவரது மகனுக்கும் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது முதியவர் வீட்டின் மேற்கூரையை உடைத்தாக கூறப்படுகிறது. இதனால் அரவது மகன் முதியவரைத் தாக்கியுள்ளார். மேலும் அவரது அண்ணன், மருமகள் ஆகிய அனைவரும் சேர்ந்து கொண்டு முதியவரை கம்பத்தில் கட்டிவைத்துள்ளனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒருவர் பின் ஒருவராக முதியவர் கட்டியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவர்கள் போலிஸாருக்கு எதுவும் தகவல் கொடுக்காமல் முதியவர் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
மேலும் முதியவரைத் தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள குடும்பத்தினரை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
கோவையில் ‘சி. சுப்பிரமணியம்’ பெயரில் உயர்மட்ட மேம்பாலம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை-விவரம்!
-
திருமணம் ஆகாத இளைஞர்களே குறி... 19 வயதில் 8 ஆண்களை ஏமாற்றிய ஆந்திராவின் கல்யாண ரா(வா)ணி!
-
நிலத்தை சமன் செய்யும்போது கிடைத்த 1 இல்ல 2 இல்ல... 86 தங்க நாணயங்கள்... திருப்பத்தூரில் நடந்தது என்ன?
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!