India
மாயமான வாலிபர் வழக்கில் திடீர் திருப்பம்.. மகனை கொலை செய்த தாய்: விசாரணையில் வெளிவந்த உண்மை!
உத்தர பிரதேச மாநிலம், மோடி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனுஜ் குமார். இவர் கடந்த ஜூலை 18ம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 3ம் தேதி நவாரி என்ற பகுதியில் சாலையோரத்தில் இருந்து அனுஜின் சடலத்தை போலிஸார் மீட்டுள்ளனர்.
இதையடுத்து, மாயமான அனுஜ் குமார் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அனுஜ் குமாரின் தாயாருக்கு தேவேந்திரா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மகன் அனுஜ் குமாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் தாயாரை அவர் கண்டித்துள்ளார். இதையடுத்து தனது ரகசியம் தெரிந்ததால் மகனைக் கொலை செய்ய அவரது தாய் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து தாய் மற்றும் அவரது நண்பர் தேவேந்திரா ஆகிய இருவரும் சேர்ந்து அனுஜ் குமாரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலிஸார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!