India
அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட தம்பி.. தம்பிக்காக ரூ.46 கோடி திரட்டிய அக்கா உயிரிழப்பு - கேரளாவில் சோகம் !
கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வந்தவர் சிறுமி அப்ரா. வெறும் 16 வயதாகும் இவருக்கு ஒரு சகோதரனும் உள்ளார். இந்த சிறுமிக்கு SMA என்று சொல்லப்படும் ஸ்பைனல் தசை சிதைவு நோய் பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் உள்ளவர்கள் தாங்களாகவே எழுந்து எந்த வேலையையும் செய்யமுடியாது.
பாதிக்கப்பட்ட சிறுமி அதற்கு தேவையான சிகிச்சை எடுத்து வந்தபோது, அவரது தம்பிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது, பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கும் ஸ்பைனல் தசை சிதைவு நோய் இருப்பதாக கூறினர். மேலும் அவரை குணப்படுத்த வேண்டுமானால் அதற்கு மருத்துவ செலவு மிகவும் அதிகமாகும் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து தனது தம்பியை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று சமூக வலைதளங்கள் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் அந்த வீடியோவில், தானும் அந்த நோயால் பாதிக்கப்ட்டுள்ளதாகவும், இருப்பினும் தனது தம்பி உயிருடன் நீண்ட நாள் வாழ வேண்டுமெனவும் அதற்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறுமியின் இந்த வீடியோ வைரலானதையடுத்து உதவும் கரங்கள் பல முன்வந்தன. அப்படி சுமார் ரூ.46 கோடி வரை அந்த சிறுமி திரட்டினார். சிறுவனுக்கு ஒரு டோஸ் மருந்துக்கு மட்டும் ரூ.18 கோடி வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், ரூ.46 கோடி வரை சிறுமி திரட்டியுள்ளார். இதையடுத்து கிடைத்த அந்த பணத்தை வைத்து அப்ரா மற்றும் அவரது தம்பிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அப்ரா நேற்று காலை உயிரிழந்தார். தனது உயிரை கூட பெரிதாக நினைக்காமல், தனது சகோதரனுக்காக குரல் கொடுத்த அந்த 16 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
காசா, லெபனான், ஈரானைத் தொடர்ந்து சிரியா : ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேல்... காரணம் என்ன ?
-
திருவள்ளுவர் சொல்லாத குறளை சொன்ன விவகாரம்... ஆளுநர் ரவி செய்தது திட்டமிடப்பட்ட சதி : செல்வப்பெருந்தகை !
-
1 மணி நேரம் வராத புறநகர் மின்சார ரயில்... ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் : சென்னையில் நடந்தது என்ன ?
-
மயிலாடுதுறை மக்களே.. உங்களுக்காக 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“பத்து தோல்வி பழனிசாமிக்கு வரும் தேர்தல் நிறைவான Goodbye!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!