India
‘எல்லோரும் whatsapp dp மாற்றுங்கள்’ : மக்களுக்கு திடீரென்று மோடி விடுத்த வேண்டுகோள் !
பிரதமர் மோடி, 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரையாடி வருகிறார். அந்த வகையில், நேற்று (ஜூலை 31), மாத இறுதி ஞாயிற்றுகிழமை நடந்த 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், வானொலி மூலம் பேசிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டு நடப்புகள், நாட்டில் நடக்கும் பிரச்னைகள் என பலவற்றை பேசிய பிரதமர், சுதந்திர தின விழாவை முன்னிட்டு மக்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் DP-யாக தேசிய கொடியை வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்ட இயக்கம், பொது மக்களின் இயக்கமாக மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று வருகின்றனர்.
நாட்டு மக்களுக்கு ஒன்றை வேண்டுகோளாக வைக்கிறேன். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் DP-யாக தேசிய கொடியை வையுங்கள்.
அதுவும் தேசிய கோடியை வடிவமைத்த பிங்கிலி வெங்கையா அவர்களை நினைவு கூறும் விதமாக வரும் ஆகஸ்ட் 2 (நாளை) முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தேசிய கொடியை போற்றுங்கள்" என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நாட்டு மக்களின் அனைத்து வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!