India
"திருடன் போலீஸ்" விளையாட்டு.. பா.ஜ.க தலைவரின் மகன் சுட்டதில் சிறுவன் உயிரிழப்பு.. உ.பி-யில் பரபரப்பு !
உத்தர பிரதேச மாநிலம் குஷாம்பி மாவட்ட பா.ஜ.க மாவட்ட செயலாளராக இருப்பவர் சஞ்சய் ஜெய்ஸ்வால். இவரது 10 வயது மகன் ஆனந்த் அந்த பகுதியில் உள்ள சிறுவர்களோடு "திருடன் போலீஸ்" விளையாட்டு விளையாடியுள்ளான்.
அதில் ஆனந்துக்கு போலிஸ் பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே தனது தந்தை வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை விளையாட்டு துப்பாக்கி என நினைத்து அதை எடுத்து வந்து விளையாடியுள்ளார்.
அப்போது விளையாட்டு துப்பாக்கியில் சுடுவது போல வேதாந்த் என்ற சிறுவனை நோக்கி ஆனந்த் சுட்டுள்ளார். அப்போது துப்பாக்கியில் இருந்து குண்டு சிறுவன் வேதாந்த்தின் மார்பின் மேல் பாய்ந்துள்ளது.
இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த அந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Also Read
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!