India

கடலில் காணாமல் போன மனைவி.. கதறிய கணவன்.. 1 கோடி செலவு செய்த மீட்புப்படை..கடைசியில் தெரியவந்த அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் . இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதி தங்கள் 2ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் விதமாக கடந்த ஜூலை 25 ஆம் தேதி கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

கடலில் இருவரும் தம்பதியாக செல்பி எடுத்து வந்தநிலையில், ஸ்ரீனிவாஸ்க்கு ஒரு போன் வைத்துள்ளது. உடனே சிறிது தூரம் சென்று போன் பேசியுள்ளார். பின்னர் திரும்ப வந்து பார்த்தபோது அவரது மனைவி காணாமல் போயுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீனிவாஸ், கடல் அலையில் இழுத்துசெல்லப்பட்டு விட்டாரோ என பயந்து அங்கிருந்த போலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் உஷார் படுத்தப்பட்டு இரண்டு நாட்கள் படகுகள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர் குறித்து ஏதும் தெரியாததால் மீட்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் இது தொடர்பாக போலிஸில் வழக்கு பதியப்பட்ட நிலையில், சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பின்னர் கடலில் இழுத்துச்செல்லப்பட்டதாக கருதப்பட்ட பிரியா தனது காதலருடன் நெல்லூரில் இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரியா திருமணத்திற்கு முன் ரவி என்பவரை காதலித்துவந்ததும், திருமணம் முடிந்த பின்னரும் இந்த தொடர்பு நீடித்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஆகவே காதலர் அழைத்த நிலையில் அவரோடு சென்றதும் தெரியவந்தது.

இதனிடையே கடலில் இழுத்துச்செல்லப்பட்டதாக கருதப்பட்ட பிரியாவை தேடுவதற்காக மீட்புப்படை கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வெளிநாடுகளில் உள்ள இருக்கைகளில் பேராசிரியர் நியமனம்-தமிழ் மொழியை 8 ஆண்டுகளாக புறக்கணிக்கும் ஒன்றிய அரசு!