India
ஸ்விஸ் வங்கியில் இருப்பதெல்லாம் கருப்பு பணம் இல்லை.. ஆனால்... சொல்வது நிர்மலா சீதாராமன் !
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் அதிக அளவில் கருப்பு பணம் வைத்திருப்பதாகவும், அதை மீட்க இந்திய அரசு தவறி விட்டதாகவும் பா.ஜ.க கடுமையாக விமர்சித்தது. மேலும், சுவிஸ் வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை மோடி பிரதமராக வந்தால் மீட்பார் என்றும் பா.ஜ.க.வினர் பேசி வந்தனர்.
அதைத் தொடர்ந்து பா.ஜ.க ஆட்சியை பிடித்த நிலையில், கருப்பு பணம் மீட்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதோடு சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களில் கருப்பு பணம் இரட்டிப்பானதாக அறிக்கை ஒன்று வெளியானது.
இந்த நிலையில் கருப்பு பணம் தொடர்பாக மக்களவையில் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. இதற்கு ஒன்றிய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் எழுத்துபூா்வமாக பதில் அளித்துள்ளார். அதில், ''அண்மையில் வெளியான சில தரவுகளின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனினும், அதைக் கருப்புப் பணமாகக் கருதக்கூடாது.
ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள் குறித்து அதிகாரபூா்வ கணக்கீடுகள் ஏதுமில்லை.வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில் காட்டாமல் சேமித்துவைத்துள்ள தொகைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ரூ.8,468 கோடிக்கும் அதிகமான வரியைச் செலுத்துமாறும் ரூ.1,294 கோடியை அபராதமாகச் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட நபா்களிடம் கோரப்பட்டுள்ளது.
கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 368 வழக்குகளில் ஆய்வு நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களிடம் இருந்து ரூ.14,820 கோடி வரியாகக் கோரப்பட்டுள்ளது. இத்தரவுகள் கடந்த மே மாதம் வரையிலானவை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் சுவிஸ் வங்கிகளில் பணம் இருந்தால் அது கருப்பு பணம். அதே பா.ஜ.க ஆட்சியில் சுவிஸ் வங்கிகளில் இருக்கும் பணத்தை கருப்பு பணமாக கருத கூடாதா என இணையதள வாசிகள் கூறி வருகின்றனர்.
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!