India
படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுமி.. வளர்ப்பு தாய் செய்த கொடூரம் - நெஞ்சை பதற வைக்கும் பகீர் சம்பவம்!
மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் வசித்துவரும் பெண் ஒருவர் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார். 9 வயதான அந்த சிறுமி இரவில் உறங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த சிறுமியை அடித்து உதைத்ததோடு பிறப்புறுப்பில் சூடும் வைத்துள்ளார். இதன் காரணமாக சிறுமியின் பிறப்புறுப்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரம் குறித்து அவரின் பக்கத்து வீட்டுகாரர்களுக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்கள் அந்த சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அந்த சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலிஸார் சிறுமியின் வளர்ப்பு தாய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுமியிடம் வாக்குமூலமும் பெறப்படவுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாநில குழந்தைகள் நலக் கமிட்டி தலைவர் கூறுகையில், அந்த சிறுமியின் தலை முடி புடுக்கப்பட்டுள்ளது என்றும், உடல் முழுக்க நக கீரல் தடங்கல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த சிறுமி விரைவில் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார் என போலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!