India
ஆட்டுக்குட்டிக்காக நாய்களிடம் சண்டையிட்டு உயிர்நீத்த சேவல்: நினைவேந்தல் செய்த ஊர்மக்கள் : உ.பி நெகிழ்ச்சி
உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் பெக்தாவுல் காலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் சால்க்ராம் சரோஜ். மருத்துவரான இவர், தனது வீட்டில் ஆடு, கோழி போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அந்த வகையில், இவரது வீட்டில் லாலி என்ற சேவல் ஒன்று வளர்ந்து வந்துள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, இவரது வீட்டில் ஆடு ஒன்று குட்டி போட்டது. அந்த குட்டியை தெருநாய்கள் சூழ, அவைகளிடம் இருந்து ஆட்டுக்குட்டியை காப்பாற்ற இந்த சேவல் களத்தில் இறங்கியது. அப்போது நாய்களுக்கும் சேவலுக்கும் ஏற்பட்ட சண்டையில் சேவல் பரிதாபமாக உயிரிழந்தது.
வீட்டின் பின்புறத்தில் நடந்த இந்த சண்டையில் சேவலின் சத்தத்தை கேட்டு வீட்டின் நபர்கள் ஓடி வந்து பார்க்கையில், சேவலுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தது. இதையடுத்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சேவலுக்கு நல்லமுறையில் இறுதிச் சடங்கு நடத்தி, அவர்கள் வீட்டின் அருகே எரித்தனர். மேலும் சேவல் லாலிக்கு நினைவேந்தல் செலுத்த குடும்பத்தார் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி நேற்று சேவலுக்கு நினைவேந்தல் செய்வதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று நினைவேந்தல் செய்ததோடு, காரியமும் செய்தனர்.
இந்த நினைவேந்தலின்போது, கலந்து கொண்ட ஊர்மக்களுக்கு பூரி, கச்சோரி, சாதம், பருப்பு, ஊறுகாய், உருளைக்கிழங்கு, தக்காளி குழம்பு, கீரை, பூந்தி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. ஒரு சேவலுக்காக ஊர் மக்களே திரண்டு வந்து நினைவேந்தல் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!