India
லாரி மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார் : பிறந்தநாள் பார்ட்டி முடித்துவிட்டு திரும்பிய 5 பேர் பலி!
கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம் எலபுர்கா தாலுகா பின்னாலா கிராமத்தைச் சேர்ந்தவர் தேவப்பா. இவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் அங்கு பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு பின்னர் நேற்று இரவு சொந்த கிராமத்திற்கு சொகுசு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பானுபுரா கிராமத்தில் எதிரில் வந்த லாரி மோதியதில் ஸ்கார்ப்பியோ கார் சுக்குநூறாக நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் சம்பவ இடத்திலேயே தேவப்பா, அவரது மருமகள் கிரிஜாம்மா, அண்ணன் மகள்களான சாந்தம்மா, பாரர்வதம்மா மற்றும் உறவினரான கஸ்தூரம்மா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஓட்டுனர் ஹர்ஷவர்தன குழந்தைகள் பஸ்ராஜ், புட்டராஜ் , பூமிகா உட்பட நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிறந்தநாள் விழா முடித்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பும்போது குடும்பத்தினர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளதாக போலிஸார் தெரிவித்தனர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் - முதல் நாளே பட்டினியோடு குழந்தைகள்: த.வெ.க அரசுக்கு தி.மு.க ஐடி விங் கடும் கண்டனம்!
-
டெல்லியில் அதிர்ச்சி: துப்பாக்கி முனையில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்முறை!
-
“சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்ட இடம்தான் இது.. யாராவது இதை தேர்வு செய்வார்களா?” - முரசொலி தாக்கு!
-
த.வெ.க.வின் நாடகத்தால் நடைபெறும் இடைத்தேர்தல் - தக்க பாடம் புகட்டும் முனைப்பில் மக்கள்!
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!