India
"கிட்ட வராதீர்கள், என் பையில் வெடிகுண்டு இருக்கிறது" -விமானத்தில் அனைவரையும் அதிரவைத்த பயணி!
உத்தரபிரதேச மாநிலம் பாட்னாவிலிருந்து தலைநகர் டெல்லிக்கு இண்டிகோ விமானம் ( 6E-2126) ஒன்று செல்லவிருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் திடீர் என தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
பயணியின் இந்த செயலால் கடும் அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில், பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்திருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
அவர்கள் வந்து விமானத்திலும், சம்மந்தப்பட்ட பயணியின் பையிலும் நடத்திய சோதனையில், வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதும் இது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்க காரணம் என்ன என்பது குறித்து போலிஸார் எந்த தகவலும் கூறவில்லை.
பின்னர் பயணிகள் பாதுகாப்பாக விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் டெல்லி புறப்பட்டது. இந்த சம்பவம் பாட்னா விமான நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read
-
”உண்மையான மக்கள் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் புகழாரம்!
-
முதலமைச்சர் சொன்னதை வழி மொழியும் இரண்டு நீதியரசர்களின் குரல்கள் : முரசொலி!
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !