India
பெண்ணுக்கு I Like You என்று செய்தி அனுப்பிய நபர்! போட்டு வெளுத்த கணவர் -ட்விட்டர் மூலம் புகார் !
நவீனமயக்கப்பட்ட உலகில் அனைத்தும் நவீனம் தான். தற்போது அன்றாட வாழ்வில் சில முக்கிய விசயங்களை நாம் ஆன்லைன் மூலம் அறிந்துகொள்ள முடியும், பகிர்ந்துகொள்ள முடியும். அந்த வகையில் இந்தியாவில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால், நமது புகார்களையும் டிஜிட்டல் வழியாகவே தெரிவிக்கும் வகையில் சிறப்பம்சங்கள் இருக்கிறது.
அதன்படி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுஷாந்த் தத் என்ற இணையவாசி ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக பஞ்சாப் காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "எனது பக்கத்துக்கு வீட்டுக்காரர் மனைவிக்கு "ஐ லைக் யூ" என்று குறுஞ்செய்தி அனுப்பியதால், அவரது கணவர் என்னை சரமாரியாக தாக்கினார். நான் மன்னிப்பு கேட்ட பின்பும், அவர் என்னை விடாமல் தாக்கிக்கொண்டே இருந்தார்.
ஆம்., நான் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்கிறேன்,. இருப்பினும் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை படித்த பஞ்சாப் காவல்துறை அவருக்கு பதிலளித்து ட்வீட் செய்துள்ளனர். அதில். "யாரென்று தெரியாத ஒரு பெண்ணுக்கு நீங்கள் சம்மந்தமே இல்லாமல் குறுஞ்செய்தி அனுப்பி என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் உங்களை அடித்திருக்கக் கூடாது.
அவர்கள் எங்களிடம் புகாரளித்திருந்தால் நாங்கள் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருப்போம். தற்போது இந்த இரு சம்பவங்களையும் நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம். நீங்கள் அருகில் இருக்கும் காவல்துறையில் புகார் அளியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் ட்வீட் செய்த சில மணி நேரங்களில் புகார் அளித்த சுஷாந்த் தத், தனது ட்விட்டர் பக்கத்தை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பஞ்சாப் காவல்துறைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!