India
நேற்று ஹரியானா.. இன்று ஜார்கண்டில்: பெண் போலிஸ் அதிகாரி வாகனம் ஏற்றி கொலை!
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியி நேற்று இரவு காவல் உதவி ஆய்வாளர் சந்தியா டாப்னோ மற்றும் போலிஸார் வாகனை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மாடுகளை ஏற்றி வந்த பிக்-அப் டிரக்கை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
ஆனால் அந்த வாகனம் நிறுத்தாமல் போலிஸார் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உதவி ஆய்வாளர் சந்தியா டாப்னோ உயிரிழந்துள்ளார். மேலும் சில போலிஸார் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து வாகனத்திலிருந்த நிசார் என்பவரை போலிஸார் பிடித்து கைது செய்துள்ளனர். வாகனத்திலிருந்த மற்றொருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹரியானா மாநிலத்தில் நேற்று, சட்டவிரோதமாக சுரங்கத்தில் கற்கலை வெட்டி எடுப்பதை தடுக்க சென்ற போலிஸ் அதிகாரி மீது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள் இன்று ஜார்கண்ட் மாநிலத்திலும் பெண் போலிஸ் அதிகாரி வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”இது முட்டாள்தனம்” : ஹரியானா வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற பிரேசில் மாடல் Reaction!
-
நலம் காக்கும் ஸ்டாலின்: அரசு நடத்தும் 10 சிறப்பு போட்டிகள்.. எப்போது? யார் யார் பங்கேற்கலாம்? - விவரம்!
-
KGF நடிகர் திடீர் மரணம் : சக நடிகர்கள் இரங்கல்!
-
”உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டே பதவி உயர்வு” : பதிவுத்துறை விளக்கம்!
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பைக் : உயிர்தப்பிய நண்பர்கள் - நடந்தது என்ன?