India
'ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது'.. ஆர்டர் போட்ட கணவனை குத்தி கொலை செய்த மனைவி!
ஜார்க்கண்ட் மாநிலம், ஜோர்பிதா கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா. இளம் பெண்ணான இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்ற பிறகுதான் புஷ்பா இக்கிராமத்திற்கு வந்துள்ளார். இவர் திருமணத்திற்கு முன்புவரை ஜீன்ஸ் உடைகளை விரும்பி அணிந்துவந்துள்ளார். இதையடுத்து திருமணத்திற்கு பிறகு புஷ்பாவின் கணவன் ஜீன்ஸ் பேண்ட் போன்ற உடைகளை அணிய வேண்டாம் என தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கிராமத்தில் நடந்த விழாவிற்கு புஷ்பா ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு சென்றுள்ளார். இதை அறிந்த அவரது கணவர் வீட்டிற்கு வந்த மனைவியிடம் 'ஏன் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்றாய்' என வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த புஷ்பா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவனை குத்தியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்திலிருந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் புஷ்பாவின் கணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பொத்தென்று மயங்கி விழுந்த அதிமுக மாவட்டச் செயலாளர்... கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டிருந்த பழனிசாமி! - video
-
“பழனிசாமியின் முகவர்... அதிமுகவின் B டீம்...” - அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி!
-
தமிழ்நாடு அரசின் Iconic Projects... அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு... விவரம்!
-
திருத்தணி வட மாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் : நடந்தது என்ன? - வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்!
-
“கோவை மக்களுக்கு 2026 புத்தாண்டுக்கான பரிசு இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!