India
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி.. கணவரின் செயலை வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி : உ.பி-யில் கொடூரம்!
உத்தரப்பிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிஷி குமார் (வயது 27). அவரது மனைவி சவிதா (வயது 24). இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் ரிஷி குமாருக்கு அந்த பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி மேல் ஆசை வந்துள்ளது.
ரிஷி குமார் பலமுறை அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு அவரின் மனைவி சவிதாவும் உடந்தையாக செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அந்த சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 12ம் தேதி அதிகாலை அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டில் இழுத்துவந்து ரிஷி குமார், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தின்போது ரிஷி குமாரின் மனைவி சவிதாவும் அங்கு இருந்து இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் இந்த விடியோவை காட்டி அந்த சிறுமியை மிரட்டிய அந்த தம்பதி, சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதோடு, அப்படி கூறினால் இதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் சிறுமி யாரிடமும் முன்புபோல பேசாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அவரின் பெற்றோர் இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் ரிஷி குமார் மற்றும் அவரின் மனைவியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பா.ஜ.கவில் இருந்து விலகிய முக்கிய தலைவர் : புதுச்சேரி அரசியல் வட்டத்தில் பரபரப்பு!
-
11 சவரன் நகை திருட்டு வழக்கு : த.வெ.க பெண் நிர்வாகி கைது!
-
”சொந்தக் கட்சிக்காரர்களாலேயே நிராகரிக்கப்பட்ட பழனிசாமி” : முரசொலி!
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!