India
ஏமாற்றி விட்டார்கள், வேலையில்லா திண்டாட்டம்.. இந்த வார்த்தைகளை பயன்படுத்தலாமா? : ராகுல் காந்தி கேள்வி!
இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தகம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.
குறிப்பாக வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் வேலையில்லா திண்டாட்டத்தின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டில் மட்டும் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பிரதமரே ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது ட்வீட்டரில், "பிரதமர் மோடியின் ஆட்சிகாலத்தில் வேலைவாய்ப்பின்மை 2 மடங்காக உயர்ந்துவிட்டது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று?" என பதிவிட்டுள்ளார்.
மேலும் தவறாகிவிட்டது. ஏமாந்துவிட்டார்கள். ஏமாற்றிவிட்டார்கள். பிரதமரே, இந்தியாவின் வேலையற்ற இளைஞர்கள் உங்கள் பொய்களுக்கு இந்த அன்பார்லிமென்டரி வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா? என்று ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!