India

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து.. பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு : இமாச்சல பிரதேசத்தில் சோகம் !

இமாச்சலப் பிரதேச மாநிலம் குல்லு என்ற பகுதியில் இருந்து, பல இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மலைப்பாங்கான இந்த சாலையில் வாகனங்கள் மிகவும் கவனமாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று குல்லு வில் இருந்து தனியார் பேருந்து ஒன்று சைஞ்ச் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பள்ளி மாணவர்கள் உள்பட பலரும் பயணித்துள்ளனர். அப்போது சுமார் காலை 8.30 மணி அளவில் அந்த பேருந்து ஜங்லா என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தனது கட்டுப்பாட்டை இழந்து மலையில் இருந்து கீழே கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.

இந்த கோர சம்பவத்தில் சிக்கி பள்ளிமாணவர்கள் உட்பட இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காவல்துறை, தீயணைப்புதுறை என்று அனைவர்க்கும் தகவல் தெரிவிக்க, அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்தனர். மேலும் குல்லு பகுதியின் துணை ஆணையர் அஷுதோஷ் கர்க் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் பதிவிட்டுள்ளார். மேலும் இது குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Also Read: ஆந்திராவில் மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் : மாப்பிள்ளையை விருந்து அழைத்து பலி கொடுத்த மாமனார் !