India
சொந்த ஊருக்கே மின்சாரம் கொடுக்க முடியாதவர்! திரௌபதி முர்மு செயல்திறன் குறித்து சிபிஎம் நிர்வாகி கேள்வி!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார்.
பாஜக அறிவித்துள்ள வேட்பாளரான திரௌபதி முர்மு 2 முறை எம்.எல்.ஏவாகவும், 1 முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். மேலும் ஜார்க்காண்டு மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் இவரின் சொந்த கிராமத்தில் இன்னும் மின்சார வசதி கூட வரவில்லை என தகவல் வெளியானது.
அரசியலில் இத்தனை பதவிகளை வகித்த திரௌபதி முர்மு அவர்களால் சொந்த கிராமத்துக்கு மின்சார வசதி கூட ஏற்படுத்த முடியவில்லையா என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இது தொடர்பான இணையத்தில் விவாதங்களும் ஏற்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும் மாதர் சங்கத்தின் தேசிய துணை தலைவருமான வாசுகி விமர்சித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், "திரவுபதி முர்மு அவர்களின் சொந்த ஊருக்கு இப்போதுதான் மின்சாரம் வரப் போகிறதாம். ஏற்கனவே கவுன்சிலர், எம்எல்ஏ, அமைச்சர், ஆளுநர், தற்போது பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போவாராம் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது" எனக் கூறியுள்ளார்.
இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திரௌபதி முர்முவால் தனது சொந்த கிராமத்துக்கு கூட மின்சார வசதி செய்துகொடுக்க முடியாத நிலையை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வும் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!