India
"இந்து கோவில்களின் மேல் மசூதிகள் கட்டப்படவில்லை" - பா.ஜ.கவின் பொய்களுக்கு பதிலடி கொடுத்த தொல்லியல் துறை!
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின்னர் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் பல மசூதிகள் முன்பு கோவிலாக இருந்தது எனவும், ஆகவே அதை இடிக்கவேண்டும் எனவும் பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் பகிரங்கமாக கூறிவருகின்றனர்.
பா.ஜ.க தலைவர்களின் இது போன்ற பேச்சுக்களில் ஒன்றாக தெலுங்கானா பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக பண்டி சஞ்சய் "மசூதிகளைத் தோண்டி பாருங்கள். அதில் சிவலிங்கம் இருக்க வாய்ப்பிருக்கலாம்" என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பண்டி சஞ்சயின் சர்ச்சை கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக செயற்பாட்டாளர் ராபின் ஷாச்செயூஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில் தெலுங்கானாவில் இந்து மதம் சார்ந்த தலங்களில் மசூதி அமைக்கப்பட்டுள்ளதா? என இந்தியத் தொல்லியல் துறையிடம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள இந்தியத் தொல்லியல் துறை "தெலுங்கானாவில் உள்ள தொன்மையான மசூதிகள் எதுவும் இந்து மதம் சார்ந்த இடங்களில் கட்டப்பட்டதற்கான ஆதாரம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார். இந்த பதில் பாஜக ஆதரவாளர்களின் தொடர் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
கோல்கொண்டா கோட்டை உட்பட தெங்கானாவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 8 இடங்களில் இந்திய தொல்லியல் துறையின் கீழ் வருகிறது. இங்கு செய்த ஆய்வின் மூலம் இந்த உண்மை தற்போது அம்பலமாகியுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !