India
“இராமர் கோயில் உட்பட 53 இந்து கோயில்களை இடிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முடிவு?” : ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இஸ்லாமிய, கிருத்துவ மத வழிபாடுகளில் தலையிட்டு வருகிறது. அந்த மதத்தை சார்ந்த கோவில்களை இடித்தும் வருகிறது.
இந்த நிலையில், தற்போது இந்து மத விவகாரத்திலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தலையிடுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, “டெல்லியில் உள்ள 53 கோயில்களை இடிக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது. நாடு முழுவதும் மதத்தின் பெயரால் நாடகம் ஆடுகிறார்கள், வெறுப்பைப் பரப்புகிறார்கள். இது தொடர்பாக டெல்லி அரசிடம் அனுமதி கோரி ஒன்றிய அரசு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது.
இந்த கோயில்களின் பட்டியலில் பழமையான ராமர் கோயில், கிருஷ்ணர் கோயில், துர்கா கோயில், மகாதேவ் கோயில், சாய்பாபா கோயில், குருத்வாரா ஆகியவையும் அடங்கும். மேலும் கஸ்தூரிபா நகர், சீனிவாஸ்புரி, முகமதுபூர், சரோஜினி நகர் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களை இடிக்கவும் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. டெல்லி அரசுக்கு அந்தக் கடிதம் கிடைத்திருக்கிறது. இது குறித்து நாங்கள் விரைவில் முடிவெடுப்போம்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Also Read
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மனிதாபிமானமற்று செயல்படும் பா.ஜ.க அரசு : பெண் மருத்துவர் மரணம் - ராகுல் காந்தி விமர்சனம்!