India
தாயை விட கேமராமேனுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரா மோடி? : இணையத்தில் வைரலாகும் சர்ச்சை வீடியோ!
நநேந்திர மோடி தான் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் அடிக்கடி குஜராத் மாநிலம் காந்திநகரில் வசித்து வரும் தன் தாயார் ஹீராபென்னைை சந்தித்து வருகிறார். அதிலும் பிறந்தநாள், தேர்தல் நேரம் போன்ற அதி முக்கிய தருணங்களில் மோடி தன் தாயாரை பார்க்கச் செல்வதும் பின்னர் அது சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆவதும் வழக்கம்.
அந்த வகையில் தனது தாயாரின் 100-வது பிறந்த நாளில்போது குஜராத் சென்ற மோடி தனது தாயாரை சந்தித்து நலம் விசாரித்து அவருக்கு இனிப்பு ஊட்டினார்.
பின்னர் தாயுடன் சேர்ந்து சிறப்பு வழிபாடு செய்த அவர், தாயின் காலை கழுவி அந்த நீரை கண்ணில் தொட்டு பாத பூஜை செய்தார். இந்த நிகழ்வு வழக்கம் போல இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.
இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. வெளியிட்ட வீடியோ ஒன்று மோடியின் விடியோவை விட இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி காந்திநகரில் உள்ள தனது தாயின் இல்லத்துக்கு சென்ற பிரதமர் மோடி, கார் நின்ற பிறகும் உள்ளேயே அமர்ந்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து கேமராமேன் அங்கு வந்தவுடனே மோடி காரிலிருந்து இறங்குகிறார்.
இதை வைத்து மோடி தாயை விட கேமராவுக்குதான் அதிக முக்கியத்தும் கொடுக்கிறார். மோடியின் தாய் பாசம் கூட இணையத்தில் ட்ரெண்ட் ஆகவேண்டும் என்பதற்காகதான் என இணையவாசிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!