India
அக்னிபாத் போராட்டம்.. புல்டோசர் கொண்டு இடிக்கப் போகிறீர்களா? மோடியை விமர்சித்த ஓவைசி!
நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இரயில்களுக்கு தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
இதன் காரணமாக வடமாநிலங்களுக்கு செல்லும் இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்து பேசிய பா.ஜ.க. தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களை சூரையாடி தீ வைத்ததால் பெரும் வன்முறைகாடாக அப்பகுதிகள் காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் வட மாநிலங்களில் பல்வேறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வடமாநிலங்களில் பரவிய இந்த வன்முறை தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களிலும் ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டம் நடைபெற்றது. அதோடு நேற்று சென்னையிலும் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த போராட்டங்கள் குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி, கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "போராடுவது நாட்டின் ஜனநாயக உரிமை. பிரதமர் நரேந்திர மோடி அரசின் தவறான முடிவை கண்டித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நாடு முழுவதும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் எத்தனை பேரின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்து தள்ளப் போகிறீர்கள்?. ஒருவேளை போராட்டத்தில் ஈடுபட்டபோது தவறு செய்திருந்தால், அவரை தண்டிக்க வேண்டியது நீதிமன்றம் தானே ஒழிய, அரசு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!