India
தொழில் நஷ்டம்.. போலி சாமியார் பேச்சைக் கேட்டு பெற்ற 3 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை? : ‘பகீர்’ சம்பவம்!
ஆந்திர மாநிலம், பேரெட்டி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி யாமினி. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் புனர்விகா, பூர்விகா என இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், பொக்லைன் இயந்திரம் தொழிலில் வேணுகோபாலுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாரோ சூனியம் வைத்ததால்தான் தான் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என நினைத்துள்ளார்.
மேலும் அவருக்குத் தெரிந்த சாமியார் ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, நரபலி கொடுத்தால் நிலைமை சரியாகிவிடும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து வீட்டில் பூஜை செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நினைத்துள்ளார்.
இதன்படி வீட்டில் நள்ளிரவில் பூஜை செய்துள்ளார். அப்போது குழந்தைகளுக்கு முகத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றியுள்ளார். பின்னர் குழந்தை புனர்விகா வாயில் குங்குமத்தைத் திணித்துள்ளார். இதில் குழந்தை மயங்கி விழுந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரை கைது செய்து குழந்தையைத் தந்தை நரபலி கொடுத்தாரா என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பஞ்சாப் மழை வெள்ளம்! : 3.87 லட்சம் பேர் பாதிப்பு - உயிரிழப்பு 51ஆக உயர்வு!
-
”பா.ஜ.கவின் பொருளாதாரச் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது” : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
தமிழ்நாட்டில் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை : போட்டி அட்டவணையை வெளியிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!