India

திணறிவரும் இந்திய பொருளாதாரம் : வங்கி கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு - தனி நபர் கடன் உயர வாய்ப்பு உள்ளதா?

இந்திய ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கை கூட்டத்தை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தும். அந்த கூட்டத்தில் வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை குறித்த முடிவுகளை வெளியிடப்படும். மேலும் அந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால குறைந்தபட்ச வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) போன்றவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து முடிவும் எடுக்கப்படும். அதன் படி அந்த கூட்டம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.

சர்வதேச பொருளாதார நிலைமை, வட்டி விகிதங்கள், பணவீக்கம் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவின் தாக்கம் போன்றவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கூட்டம் முடிந்து நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டள்ளது. அதன்படி பணவீக்கம் காரணமாக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பணவீக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக ரெப்போ ரேட் விகிதம் 0.5 சதவீதம் அதிகரித்து 4.90 ஆக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

இதற்கு முன்பு கடந்த மாதத் தொடக்கத்தில் 0.40 சதவீதத்தை உயர்த்தி ரெபோ ரேட்டை 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இந்நிலையில், இன்று மேலும் 0.5 சதவீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயர வாய்ப்புள்ளது.

Also Read: மக்களுடன் மக்களாய் 8 ஆண்டுகள் பதுங்கி இருந்த பயங்கரவாதி.. போலிஸ் எடுத்த ஆக்‌ஷன் - யார் இந்த தலீப் உசேன்?