India
வெடித்து சிதறும் இ-பைக்குகள்.. புது கொள்கையை உருவாக்கும் போக்குவரத்துத் துறை.. என்ன செய்யப்போகிறது அரசு?
பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொட்டு வருவதால் பொதுமக்களின் கவனம் மின்சார வாகனங்களின் மீது திரும்பியிருக்கிறது. இருப்பினும் ஒரு சில மின்சார வாகனங்களை தவிர மற்றவற்றில் தொடர்ந்து கோளாறு கொடுத்து வருகிறது.
லட்சக்கணக்கில் காசு கட்டி வாங்கிய சிறிது நாட்களிலேயே பெரியளவிலான கோளாறு கொடுப்பதோ அல்லது வெடித்து சிதறுவது மின்சார வாகன பயணாளர்களை பெரிதும் அச்சமடைய வைத்திருக்கிறது.
அதிலும் கோடை வெப்பமும் அதிகரித்து வருவதால் சார்ஜ் செய்யும் போது தீப்பிடித்து எரிவது, ஓடிக்கொண்டிருக்கும் போதே சூடு தாங்காமல் வெடிப்பது, முறையற்ற தயாரிப்பால் பாகங்கள் உடைவது போன்றவை அண்மைக்காலங்களாக நடைபெற்று வருகிறது.
இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், எலெக்டிரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிவதை தடுப்பதற்காக புதிய பேட்டரி கொள்கையை வகுக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஆய்வு நடத்திய டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்திய அறிவியல் ஆய்வு நிறுனம் கோடை வெப்பம் தாங்கமுடியாமல் அதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகள் தீப்பற்றுவதாக கண்டறிந்துள்ளன.
மேலும், இந்த பேட்டரிகள் அதிகமும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பொருத்தப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் புதிதாக தயாரிக்கப்படும் வாகனங்களில் எத்தகைய பேட்டரிகள் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து சாலை போக்குவரத்து துறை கொள்கை ஒன்றை தயாரித்து வருகிறது. விரைவில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!