India
” ’தமிழ்நாடு மாடலை’ பின்பற்றுங்கள்” : மக்களவையில் நிதின் கட்கரி கூறியது என்ன ?
ஒன்றிய நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் மக்களவையில் நடந்த விவாதத்தின் போது ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருந்தார்.
அப்போது, புனே மற்றும் கோவா போன்ற நகரங்களில் கட்டப்பட்டு வரும் அதிநவீன சாலைகளை போன்று சென்னையில் துறைமுகத்தில் இருந்து புறநகரை இணைக்கும் வகையில் மூன்றடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது என நிதின் கட்கரி கூறினார்.
மேலும், ஆட்சி மாற்றம், அனுமதிகள் பெறுவதில் காலதாமதம், ஒப்பந்ததாரர்களிடையேயான பிரச்னை உள்ளிட்ட பல காரணங்களால் சில திட்டங்கள் முடங்கியதாக தெரிவித்த அவர், விரைவில் அவை சரி செய்யப்பட்டு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சாலை விபத்துகளை தடுப்பதில் தமிழ்நாடு மாடலை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என சாலை போக்குவரத்துத் துறை நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தின் போது நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !