India

'ரஷ்யா உடனான நட்புறவை பயன்படுத்தி நடவடிக்கை எடுங்கள்' : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP விடுத்த கோரிக்கை என்ன?

நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கியது.இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிக்க தி.மு.க எம்.பி, டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு என நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இதையடுத்து மக்களவையில் பேசிய டி.ஆர்.பாலு, "உக்ரைனில் நிலவும் போர் சூழல் காரணமாக அங்கு மருத்துவம் படித்து வந்த தமிழ்நாட்டு மாணவர்கள் உட்பட இந்திய மாணவர்களின் கல்வியைத் தொடர முடியாமல் நாடு திரும்பியுள்ளனர்.

இந்த மாணவர்கள் தொடர்ந்து தங்களது மருத்துவக் கல்வியைத் தொடர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவர்கள் ரஷ்யாவில் மருத்துவக் கல்வி படிக்க அந்நாட்டுடன் உள்ள நட்புறவைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனென்றால் உக்ரைனிலும், ரஷ்யாவிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.

தொழிலாளர்களை அவமதிக்கும் வகையில் பி.எஃப் மீதான வட்டியை ஒன்றிய அரசு 8.1% ஆக குறைத்துள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு ரூ.9 ஆயிரம் குறைந்த பட்ச பென்ஷனாக வழங்கவேண்டும். ஆனால் ஒன்றிய அரசு ரூ.1,000 மட்டுமே வழங்கி வருகிறது " எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பெட்ரோல் விலை உயர வாய்ப்பு: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் கூறிய சூசக தகவலால் பரபரப்பு!