India
“ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்.. தோல்வியில் முடிந்த 16 மணி நேரப் போராட்டம்” : நடந்தது என்ன?
மத்திய பிரதேச மாநிலம், பத்சத் கிராமத்தைச் சேர்ந்த கரவ் துபே என்ற 4 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி உள்ளே விழுந்துள்ளான். இதுபற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சிறுவனை மீட்பதற்கான முயற்சியில் இறங்கினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து 16 மணிநேர போராட்டத்திற்குப் பின்பு சிறுவனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
பின்னர், பெற்றோர்களின் முன்னிலையில் சிறுவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 16 மணி நேரத்திற்குப் பிறகு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகம் முடிவதற்குள் ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்திற்கு உட்பட்ட சிறுவன் ஒருவன் 55 அடி அழ ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். சிறுவனை உயிருடன் மீட்பதற்கான பணிகளை அம்மாநில அரசு முடக்கியுள்ளது.
உலகம் முழுவதுமே ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பு சம்பவங்களுக்கு முடிவு இல்லாமல் தொடர்கதையாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
SIR நடத்துவதை ஒத்தி வைக்க வேண்டும் : நடைமுறை சிக்கல்களை விளக்கி தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்த திமுக!
-
குடும்ப அரசியலைப் பற்றி பேச பா.ஜ.கவுக்கு தகுதியே இல்லை : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
SAAF தொடரில் பதக்கம் வென்று அசத்திய தமிழர்கள்.. ரூ.40.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் பாராட்டு!
-
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !