India
"பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது இதைச் செய்யவே கூடாது” - ஹூண்டாய் மோட்டார்ஸ் பிரச்சாரம்! #BeTheBetterGuy
சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் #BeTheBetterGuy எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள ஹூண்டாய் நிறுவனம், சமூக அக்கறையிலும் கவனம் செலுத்துகிறது.
அந்தவகையில், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியோடு இணைந்து #BeTheBetterGuy எனும் தலைப்பில் தொலைக்காட்சி - இணைய - சமூகவலைதள விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.
சாலை போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்து மற்றவர்களுக்கு இடையூறு செய்யாமல் பயணிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
பாதசாரிகள் தொலைபேசியில் பேசிக்கொண்டே சாலையை கடப்பதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்த்தால் விபத்துகளை ஒரளவு குறைத்துக் கொள்ளலாம். பாதசாரிகள் மஞ்சள்கோட்டுப் பகுதியில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்.
ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறையின் சாலை விபத்துகள் குறித்த புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதசாரிகள் விபத்துகளில் பலியாகியுள்ளனர்.
பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சாலை விதிமுறைகளை பின்பற்றுவது நமக்கு மட்டுமல்லாது சாலையில் பயணம் செய்யும் அனைவருக்கும் நன்மை பயக்கும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!