India
உச்சகட்ட மதுபோதையில் தகராறு: பூக்கடை ஊழியர் கழுத்தறுத்து கொலை - புதுவையில் நடந்த பயங்கரம்!
புதுச்சேரி நகரப்பகுதியில் அமைந்துள்ள குபேர் அங்காடி வளாகத்தினுள் பூக்கடைகள் அமைந்துள்ளது. இதனிடையே பூக்கடை ஒன்றில் காரைக்காலை சேர்ந்த அருளானந்தம் (38) என்பவர் கடையிலேயே தங்கி பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அருளானந்தம் மற்றும் அருகில் உள்ள பூக்கடைகளில் வேலை செய்யும் 2 நபர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.
அப்போது உச்சகட்ட மதுபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, அருளானந்தத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்து 2 நபர்களும் தப்பியோடினார்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த செக்யூரிட்டி கொலை சம்பவம் தொடர்பாக பெரியகடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களையும் தேடி வருகின்றனர்.
Also Read
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!
-
அரசு கல்லூரியில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் : அமைச்சர் கோவி.செழியன் தகவல்!
-
Insta-வில் வெளியிட்ட வீடியோ.. ரவுடியை திருக்குறள் வாசிக்க வைத்து நூதன தண்டனை கொடுத்த தூத்துக்குடி போலீஸ்!
-
“தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கும் முதலீடுகளை பார்த்து எரிச்சல் அடையும் பழனிசாமி” - முரசொலி விமர்சனம்!
-
“உங்கள் நிறுவனங்களை தமிழ்நாட்டில் Invest செய்ய Motivate செய்யுங்கள்!” - Germany-ல் முதலமைச்சர் கோரிக்கை!