India
ஒரே இளைஞரை காதலித்த 2 பெண்கள்... வாக்குவாதத்தால் ஏற்பட்ட வினை... இளைஞர் பரிதாப பலி - நடந்தது என்ன?
ஒரே இளைஞரை 2 இளம்பெண்கள் காதலித்த நிலையில் காதலன் எதிர்பாராவிதமாக உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராணிபுரா பகுதியை சேர்ந்தவர் லியோட் டிசோசா (29). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்விதா (22) என்ற பெண்ணை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களது காதலில் குறுக்கே நுழைந்துள்ளார் மற்றொரு பெண்ணான டாக்லின். டாக்லினும் லியோ டிசோசாவை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை மங்களூரு சோமேஸ்வரா கடற்கரைப் பகுதியில் லியோ டிசோசா மற்றும் அவரது காதலி அஸ்விதா மற்றும் டாக்லின் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது தனது எட்டு வருடக் காதலை பிரிக்கக்கூடாது என்று வாக்குவாதம் செய்து அஸ்விதா கடலில் குதித்துள்ளார். அவரைக் காப்பாற்ற காதலன் லியோ டிசோசா குதித்தார். அஸ்விதாவை உயிருடன் மீட்ட பின் லியோ டிசோசா மயக்கத்தில் இருந்துள்ளார்.
அவர்கள் இருவரையும் அங்குள்ள நபர்களின் உதவியோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார் டாக்லின். ஆனால் வழியிலேயே லீயோ டிசோசா உயிரிழந்தார். அஸ்விதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உல்லால் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!